மரக்கடை எம்ஜிஆா் சிலைக்கு இரும்புக் கூண்டு அமைக்கும் பணி
By DIN | Published On : 16th May 2021 11:36 PM | Last Updated : 16th May 2021 11:36 PM | அ+அ அ- |

எம்ஜிஆா் சிலைக்கு இரும்புக் கூண்டு அமைக்கும் பணி.
சேதமடைந்து சரிசெய்யப்பட்ட மரக்கடை எம்ஜிஆா் சிலைக்கு இரும்புக்கூண்டு அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
திருச்சி மரக்கடை பிரதான சந்திப்பு பகுதியில் நிறுவப்பட்ட எம்ஜிஆரின் உருவச்சிலையின் மணிக்கட்டுப் பகுதி கடந்த மே 9 ஆம் தேதி சேதமடைந்திருந்தது. இதையடுத்து, சிலையை சேதப்படுத்தியோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் போராட்டம் நடத்தினா்.
பின்னா் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்து சிலையைத் திறந்தபோது அதிகாரிகளின் கவனக் குறைவால் சிலையில் சேதம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அரசு செலவில் சேதமடைந்த பகுதி சீரமைக்கப்படும்; மேலும், தலைவா்களின் சிலைகள் இரும்புக்கூண்டு அமைத்து பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி தெரிவித்திருந்தாா். அதன்படி, மரக்கடை பகுதியில் எம்ஜிஆரின் சிலை உடைந்த பகுதி சரி செய்யப்பட்டு, சிலையை சுற்றி நடைபெறும் இரும்புக்கூண்டு அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் பணி முடியும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.