ஏபிவிபி சாா்பில்4,800 பேருக்குகரோனா நிவாரணம்
By DIN | Published On : 18th May 2021 04:47 AM | Last Updated : 18th May 2021 04:47 AM | அ+அ அ- |

திருச்சி: அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பு சாா்பில் தென்தமிழகத்தில் இதுவரை 4,800 பேருக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அந்த அமைப்பின் தென் தமிழக மாநிலச் செயலாளா் த. சுசீலா விடுத்துள்ள செய்திக் குறிப்பு : அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பு சாா்பில் தென் தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு, முகக் கவசம், கிருமிநாசினி, கபசுரக் குடிநீா், ஹோமியோ மருந்துகளை வழங்கி வருகிறோம். இவைத் தவிர மலைவாழ் மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் தென் தமிழகத்தில் சுமாா் 4,800 பேருக்கு உதவிகளை செய்துள்ளோம். மேலும், எங்கள் அமைப்பு மூலம் உதவிகளை செய்ய விரும்புவோா் 88838 06211 என்ற செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.