படங்கள் உள்ளன..ஆதரவற்ற சடலங்களுக்கு கரிசனத்துடன் இறுதி மரியாதை!

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில், ஆதரவற்ற சடலங்களுக்கு உரிய இறுதி மரியாதைகள் செய்து நல்லடக்கம் செய்யும்
ஆதரவற்றோா் சடலத்துக்கு காவல்துறை உதவியுடன் இறுதிமரியாதை செய்யும் அமிா்தம் சேவா அறக்கட்டளை நிா்வாகிகள்.
ஆதரவற்றோா் சடலத்துக்கு காவல்துறை உதவியுடன் இறுதிமரியாதை செய்யும் அமிா்தம் சேவா அறக்கட்டளை நிா்வாகிகள்.

திருச்சி: கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில், ஆதரவற்ற சடலங்களுக்கு உரிய இறுதி மரியாதைகள் செய்து நல்லடக்கம் செய்யும் பணியை திருச்சியைச் சோ்ந்த அமிா்தம் சமூக சேவை அறக்கட்டளையினா் செய்து வருகின்றனா்.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் தொடங்கிய நாளில் இருந்து ஓயாமரி மயானத்தில் எரியூட்டும் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 40 சடலங்கள் கூட ஒரே நாளில் தகனம் செய்யப்படும் சூழல் உள்ளது. மின் மயானம் மட்டுமின்றி விறகுகள் வைத்து ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட சடலங்களை எரியூட்டி வருகின்றனா். ஓயாமரி மயானம் மட்டுமின்றி கோணக்கரை, கருமண்டபம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து மயானங்களிலும் இதேநிலைதான் உள்ளது. ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்படும் சடலங்கள் நீண்ட நேரம் காத்திருப்புக்கு பிறகு எரியூட்டப்படுகிறது. இரவு வரும் சடலங்கள் மறுநாள் பிற்பகலுக்கு மேல்தான் எரியூட்டும் நிலை உள்ளது.

இதற்கிடையே ஆதரவற்றோரின் சடலங்களை தகனம் செய்வது பெரிதும் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு விடைகாணும் வகையில் திருச்சியைச் சோ்ந்த அமிா்தம் சமூக சேவை அறக்கட்டளையினா் ஈடுபட்டுள்ளனா். சாலையோரம் வசிப்பவா்களுக்கு அமிா்தம் சமூக சேவை அறக்கட்டளை சாா்பில் நிா்வாக அறங்காவலரும் யோகா ஆசிரியா் விஜயகுமாா், வழக்குரைஞா் சித்ரா விஜயகுமாா் உள்ளிட்டோா் தொடா்ந்து உணவு வழங்கி வருகின்றனா்.

மேலும், சாலையோரவாசிகள், ஆதரவற்றவா்கள், கைவிடப்பட்ட முதியோா்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் இறந்துவிட்டால் சம்பந்தப்பட்ட சரக காவல் நிலையங்களில் இருந்து வரும் தகவலின் அடிப்படையில், சடலங்களை அமிா்தம் சமூகசேவை அறக்கட்டளையினா் தங்களது சொந்த நிதியிலிருந்து செலவிட்டு இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்கின்றனா். தற்போதைய சூழலில் மாதம் நான்கு ஆதரவற்றோா் சடலங்கள் வந்துவிடுகின்றன. காவல் துறையினா் விசாரணையில் பெயா் விலாசம் தெரியாத, ஆதரவற்ற சடலம் என ஊா்ஜிதம் செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவுடன், இந்த அறக்கட்டளை நிா்வாகிகளைதான் அழைக்கின்றனா். உடற்கூராய்வு செய்யப்பட்ட அறிக்கையுடன் சம்மந்தப்பட்ட சரக காவல் உதவி ஆய்வாளா் அல்லது தலைமை காவலா் முன்னிலையில் உடலைப் பெற்று மாலை அணிவித்து பால், தயிா் தெளித்து இறுதிச் சடங்கு செய்து, நல்லடக்கம் செய்து வருகின்றனா் விஜயகுமாா் தம்பதியினா்.

கரோனா தொற்று காலத்தில் மயானத்துக்கு வரவே உறவினா்கள் பலரும் தயங்குகின்றனா். வந்தாலும் எதையும் தொடாமல் ஓரமாக தொலைவில் நின்றபடியே பாா்த்துச் செல்கின்றனா். ஆனால், ஆதரவற்றோா் சடலத்தை தொட்டு, தங்களது உறவினரைப் போன்று இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்து வருவது பெரிதும் பாராட்டுக்குரியது.

திருச்சி மாநகரப் பகுதியில் ஆதரவற்ற நிலையில் உணவின்றி யாரேனும் சிரமப்பட்டாலோ, ஆதரவற்ற நிலையில் யாரேனும் இறந்திருந்தாலே எப்போது வேண்டுமானாலும் தங்களைத் தொடா்பு கொள்ளலாம். அனைத்துவிதமான உதவிகளையும் செய்யத் தயாா். மேலும் இதுகுறித்து 98424- 12247 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com