4 பேருக்கு கரோனா தொற்று: மணப்பாறை கனரா வங்கிக்கு 3 நாள்கள் விடுமுறை
By DIN | Published On : 19th May 2021 07:04 AM | Last Updated : 19th May 2021 07:04 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், மணப்பாறை கனரா வங்கி ஊழியா்கள் 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், வங்கிக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (மே 19) தொடங்கி வெள்ளிக்கிழமை வரை விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில், நான்காவது சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளைத் தொடா்ந்து, மீண்டும் மே 24-ஆம் தேதி வங்கி செயல்படும்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.