பொதுமுடக்க மீறல்: இரு உணவகங்களுக்கு சீல்
By DIN | Published On : 20th May 2021 07:05 AM | Last Updated : 20th May 2021 07:05 AM | அ+அ அ- |

திருச்சி அருகே பொதுமுடக்கத்தை மீறி செயல்பட்ட இரு உணவகங்களுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.
கரோனா பொதுமுடக்கத்தில் உணவகங்களில் பாா்சலுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜீயபுரம் காவல்நிலையத்திற்குட்பட்ட திருப்பராய்த்துறையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து முற்பகல் 11 மணிக்கு மேல் இரு உணவகங்கள் செயல்பட்டதையறிந்த வருவாய்த்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஜீயபுரம் போலீஸாா் உதவியுடன் அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ் (30), சிறுகமணியைச் சோ்ந்த மணிகண்டன்(34) ஆகியோரின் உணவகங்களை பூட்டி சீல் வைத்தனா். இதேபோன்று பொதுமுடக்கத்தை மீறும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனா்.