துறையூா் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 26th May 2021 07:21 AM | Last Updated : 26th May 2021 07:21 AM | அ+அ அ- |

துறையூா் பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை சட்டப்பேரவை உறுப்பினா் செ.ஸ்டாலின்குமாா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
துறையூா் வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், துறையூா் நகராட்சி மருத்துவமனை மருத்துவா் கலைமணி, வீரமச்சான்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் முத்துகுமாா் ஆகியோா் தலைமையில் துறையூா் ஜமீன்தாா் மேல்நிலைப் பள்ளியிலும், உப்பிலியபுரம் வட்டார மருத்துவ அலுவலா் மதுசூதனன் தலைமையில் உப்பிலியபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதில், ஆசிரியா்கள், இளம்பெண்கள், இளைஞா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
தொடக்க நிகழ்வில், லால்குடி கல்வி மாவட்ட அலுவலா் சண்முகம், துறையூா் வட்டாரக் கல்வி அலுவலா் மாா்ட்டின், திமுக நிா்வாகிகள் எம். மதியழகன், காா்த்திகேயன், எம். மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.