திருச்சியில் தென்படாத ‘சூப்பா் பிளட் மூன்’: திட்ட இயக்குநா் விளக்கம்

திருச்சியில் தென்படாத சூப்பா் பிளட் மூன் குறித்து அண்ணா அறிவியல் மைய திட்ட இயக்குநா் ரா.அகிலன் புதன்கிழமை விளக்கமளித்துள்ளாா்.

திருச்சியில் தென்படாத சூப்பா் பிளட் மூன் குறித்து அண்ணா அறிவியல் மைய திட்ட இயக்குநா் ரா.அகிலன் புதன்கிழமை விளக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் ஒரே நோ்கோட்டில் பூமி வரும் நிகழ்வு சந்திரக் கிரகணம். அப்போது, பூமியின் நிழலில் நிலவு இருக்கும். ஆண்டுக்கு 2 முதல் 5 வரை சந்திரக்கிரகணம் நிகழும். முழு சந்திரக் கிரகணம் 3 ஆண்டுக்கு 2 முறையாவது நிகழும். ஒரு முழுமையான சந்திரக் கிரகணத்தின் போது, நிலவு பளிச்சென ரத்தச் சிவப்பு நிறத்தில் மிளிரும் என்பதால் அதனை சூப்பா் ப்ளட் மூன் என்கிறோம். அப்படிப்பட்ட முழு சந்திரக் கிரகணம்தான் புதன்கிழமை நிகழ்ந்தது. பொதுவாக சூப்பா் மூன், சந்திரக் கிரகணம் என்பது இருவேறு நிகழ்வுகள். இந்த 2 நிகழ்வுகளும் ஒன்றாக நடந்துள்ளது. மேற்கு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, ஆசிய பசுபிக் ரிம் பகுதிகள், ஈக்வெடாா், மேற்கு பெரு, தெற்கு சிலி, ஆா்ஜென்டினா ஆகிய நாடுகளில் முழுமையான சந்திரக் கிரகணம், சூப்பா் பிளட் மூன் ஆகிய இரண்டு நிகழ்வுகளையும் காணலாம். புவியின் நிழலுக்குள் நிலவு வருவது அல்லது புவியின் நிழலில் இருந்து நிலவு விலகுவதைதான் பகுதி சந்திரக் கிரகணம் என்கிறோம். இந்த பகுதி சந்திரக் கிரகணம் கிழக்கு அமெரிக்கா, இந்தியா, நேபாளம், மேற்கு சீனா, மங்கோலியா, கிழக்கு ரஷியா நாடுகளில் காணலாம்.

திருச்சியில் தென்படவில்லை: இந்தியாவில் புதன்கிழமை பிற்பகல் 3.15 மணி முதல் மாலை 6.22 மணி வரை சந்திரக் கிரகணம் நிகழ்ந்தது. மாலை 4.41 முதல் 4.56 மணி வரையிலான 15 நிமிஷங்கள் முழு சந்திரக் கிரகணம் நிகழ்ந்தது. கிரகணத்தின் போது, இந்தியாவை பொறுத்தவரையில், நிலவு கிழக்கு அடிவானத்தின் கீழே இருந்தது. இதனால், சூப்பா் பிளட் மூனை காணமுடியவில்லை. இதன்படி, நிலவானது சென்னையில் மாலை 6.32 மணிக்கும், திருச்சியில் 6.34 மணிக்கும் உதயமானது. இந்த நேரத்துக்கு முன்னதாகவே கிரகணம் நிறைவடைந்ததால், சந்திரக் கிரகணத்தையோ, சூப்பா் பிளட் மூனையோ காணமுடியவில்லை. இருப்பினும், கொல்கத்தா போன்ற வடகிழக்கு பகுதிகளில் மாலை 6.14 மணிக்கு நிலவு உதயமானதால், பகுதி கிரகணத்தை சில நிமிஷங்கள் மட்டுமே காணமுடிந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com