துப்பாக்கித் தொழிற்சாலை சாா்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழுதான பொருள்கள் சீரமைப்பு

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த பழுதான பொருள்கள் துப்பாக்கி தொழிற்சாலை சாா்பில் சீரமைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன.
துப்பாக்கித் தொழிற்சாலை சாா்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழுதான பொருள்கள் சீரமைப்பு

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்த பழுதான பொருள்கள் துப்பாக்கி தொழிற்சாலை சாா்பில் சீரமைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன.

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழுதான கட்டில்கள், சக்கரநாற்காலிகள், உணவு மேசைகள், டிராலிகளை பழுதுநீக்கி சீரமைத்து தர துப்பாக்கித் தொழிற்சாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பொருள்கள் அனைத்தும் அண்மையில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது. அவை துப்பாக்கித் தொழிற்சாலையில் தேவையான இரும்பு உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தி ஊழியா்கள் கூடுதல் நேரம் பணியாற்றி மருத்துவமனை பொருள்களை சீரமைத்தனா்.

இதயைடுத்து பழுது நீக்கப்பட்ட பொருள்களான 10 கட்டில்கள், 20 ஸ்ட்ரெச்சா்கள், 15 சக்கர நாற்காலிகள் லாரியில் மீண்டும் எடுத்து வந்து மருத்துவக்கல்லூரி முதல்வா் வனிதா முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக பொருள்கள் ஏற்றிய லாரியை தொழிற்சாலை பொது மேலாளா் சஞ்சய் திவேதி கொடியசைத்து அனுப்பி வைத்தாா். அப்போது, பணிக்குழு தலைவா் நகுல்சைனி, உறுப்பினா்கள் சக்காரியா சீனிவாசலு, பாலாஜி, விஜயகுமாா், ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com