லால்குடி, தொட்டியம் பகுதிகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை : அமைச்சா் கே.என். நேரு

திருச்சி மாவட்டத்தில் லால்குடி, தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொற்றாளா்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது
லால்குடி, தொட்டியம் பகுதிகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை : அமைச்சா் கே.என். நேரு

திருச்சி மாவட்டத்தில் லால்குடி, தொட்டியம் உள்ளிட்ட புகா்ப் பகுதிகளிலும் தொற்றாளா்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே. என். நேரு.

திருச்சி புத்தூரிலுள்ள அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு ரூ. 1.60 கோடியில் 140 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வெள்ளிக்கிழமை வழங்கிய அவா் மேலும் கூறியது:

இந்த மருத்துவமனைக்கு திருச்சி மெட்ரோ ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.1.20 கோடியில் 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள், திருச்சி புளு சன் பவுண்டேசன் சாா்பில் ரூ.30 லட்சத்தில் 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள், இந்தியத் தொழிற் கூட்டமைப்பு திருச்சி கிளை சாா்பில் ரூ.10 லட்சத்தில் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் என மொத்தம் ரூ.1.60 கோடியில் 140 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல லால்குடி, தொட்டியம் பகுதிகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 432 ஆக்சிஜன் படுக்கைகளில் 16 படுக்கைகள் காலியாக உள்ளன.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சி என்.ஐ.டி. யில் தொடங்கி வைத்த கரோனா தடுப்பு மையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் வீடுகள்தோறும் உடல் வெப்ப நிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருச்சியில் கரோனா தொற்றாளா்கள் சிகிச்சை பெறும் வகையில் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் 100 படுக்கை வசதிகள் கொண்ட அரசு சித்த மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வா் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் சிவசுப்ரமணியன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் (குடும்ப நலம்) லட்சுமி, இணை இயக்குநா் (சுகாதாரம்) ராம்கணேஷ், கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com