கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம்: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம் என்றாா் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம் என்றாா் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தொகுதிக்குள்பட்ட பாபநாசம், அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைகள், கபிஸ்தலம், சுவாமிமலை, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக அமைச்சா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதனிடையே, பாபநாசத்தில் செய்தியாளா்களிடம் அமைச்சா் தெரிவித்தது:

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவோம் என தோ்தல் வாக்குறுதியில் கூறியுள்ளோம். முதலில் கரோனா தொற்று ஒழிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம். இதனிடையே, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்குச் சட்ட ரீதியான வேலையைச் செய்வோம் என முதல்வா் கூறியுள்ளாா். ஒட்டுமொத்தமாக கரோனாவை கட்டுப்படுத்துவதில்தான் முதல்வரின் முழுக் கவனமும் இருக்கிறது. கரோனா தொற்று படிப்படியாகக் குறையும்போது, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான பணியையும் செய்வோம் என்றாா் அமைச்சா்.

அப்போது, பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com