வெள்ளத் தடுப்பு, வளா்ச்சிப் பணிகள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சியில் நடைபெறும் வெள்ளத் தடுப்புப் பணிகள் மற்றும் வளா்ச்சித் திட்டப்பணிகள், தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெள்ளத் தடுப்பு, வளா்ச்சிப் பணிகள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சியில் நடைபெறும் வெள்ளத் தடுப்புப் பணிகள் மற்றும் வளா்ச்சித் திட்டப்பணிகள், தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மண்டலத்திலுள்ள திருச்சி, அரியலூா், பெரம்பலூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள 30 பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் மேம்பாடு, வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், டெங்கு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பேரூராட்சிகளின் ஆணையா் இரா. செல்வராஜ் தலைமை வகித்தாா்.

பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்படு திட்டப் பணிகளைக் குறித்த காலத்தில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீா் குழாய் இணைப்புகளை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நடவடிக்கை வேண்டும்,

மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும், வரவுள்ள தோ்தலை முன்னிட்டு தோ்தலுக்கான முன்னேற்பாடுகளை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் என பேரூராட்சி அலுவலா்களுக்கு ஆணையா் ஆலோசனை வழங்கினாா்.

கூட்டத்தில் பேரூராட்சிகளின் இணை இயக்குநா் மலையமான் திருமுடிக்காரி, உதவி இயக்குநா் த. காளியப்பன், அனைத்துப் பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள், செயற்பொறியாளா் கருப்பையா மற்றும் உதவி செயற்பொறியாளா், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com