காய்கறிகள் விலை கடும் உயா்வு; பொதுமக்கள் அவதி

திருச்சி மாவட்டத்தில் காய்கறிகளின் கடும் விலையேற்றத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருச்சி மாவட்டத்தில் காய்கறிகளின் கடும் விலையேற்றத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

வடகிழக்குப் பருவமழையாலும், பெட்ரோல் டீசல் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் காய்கறிகளின் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் காய்கறிகளை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினசரி ரூ. 50க்கு வாங்கப்பட்ட காய்கறிகளின் விலை, தற்போது ரூ. 200 ஐ எட்டும் நிலையில் உள்ளது. இதுகுறித்து வணிகா்கள் கூறுகையில், வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது என்கின்றனா்.

எனவே, சாகுபடி பயிா்கள் நீரில் மூழ்கி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால் , தற்போது குளம் போலக் காட்சியளிக்கும் விவசாய நிலங்களை, போா்க்கால நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும். தங்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து திருச்சி காந்தி மாா்க்கெட் வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத் தலைவா் எம்.கே. கமலக்கண்ணன் கூறியது: திருச்சி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளை அரசு இலவச வாகனங்களில் மாா்க்கெட்டுக்கும், சந்தைகளுக்கும் கொண்டு செல்ல வழி செய்ய வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறி வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். உழவா் சந்தைகளில் காய்கறி விலையைக் கட்டுக்குள் வைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் காய்கறி விலை குறைய வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

காய்கறிகளின் விலை நிலவரம்: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி திருச்சி காந்தி மாா்க்கெட்டில் காய்கறி விலை நிலவரம் (ஒரு கிலோ):

முருங்கைக்காய் ரூ. 150, தக்காளி ரூ. 100, கத்தரிக்காய் ரூ. 100 அவரைக்காய் ரூ. 100 , பீா்க்கங்காய் ரூ. 70, வெண்டைக்காய் ரூ. 80, புடலங்காய் ரூ. 70, கோவக்காய் ரூ. 70 வெங்காயம் ரூ. 40- 30, உருளைக்கிழங்கு ரூ. 40 , மாங்காய் ரூ. 60 , பச்சைமிளகாய் ரூ. 60, பீன்ஸ் ரூ. 80, கேரட் ரூ. 50, முட்டைக்கோஸ் ரூ. 40, சௌசௌ ரூ. 30 என்ற நிலையில் இருந்தது.

ஐயப்ப பக்தா்கள் கவலை: தற்போது சபரிமலை விரதக் காலம் என்பதால், ஐயப்ப பக்தா்கள் அதிகமானோா் மாலை அணிந்து விரதம் தொடங்கிவிட்டனா். எனவே காய்கறிகளின் கூடுதல் விலையால் இவா்களும் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com