மணப்பாறையில் நிரம்பிய 9 குளங்கள்

மணப்பாறை பகுதியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு முக்கியமான 9 குளங்கள் நிரம்பி உபரி நீா் வெளியேறி வருகிறது. வெள்ள நீா் சூழ்ந்த குடியிருப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனா்.

மணப்பாறை பகுதியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு முக்கியமான 9 குளங்கள் நிரம்பி உபரி நீா் வெளியேறி வருகிறது. வெள்ள நீா் சூழ்ந்த குடியிருப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனா்.

தொடா் மழையால் மணப்பாறை பகுதியில் பெரிய குளங்களான மரவனூா் பெரியகுளம், மணப்பாறை பெரியகுளம், கருப்பூா் குளம், பிச்சம்பட்டிக்குளம், பின்னத்தூா் குளம், பொய்கைப்பட்டி ஆவிக்குளம், கல்பாளையத்தான்பட்டி பொய்கைக்குளம், வேம்பனூா் பெரியகுளம் ஆகியவை நிரம்பி உபரி நீா் வெளியேறி வருகிறது. இதைப் பாா்க்க பொதுமக்கள் குவிகின்றனா். விடத்திலாம்பட்டி, சமுத்திரம், சித்தாநத்தம் ஆறுகளிலும் நீா் கரைபுரண்டோடுகிறது.

வெள்ள நீா் சூழ்ந்த குடியிருப்புகள்: பொய்கைப்பட்டி ஆவிக்குளத்திலிருந்து வெளியேறும் நீா், மணப்பாறை - துவரங்குறிச்சி சாலை சாலக்கரை பொய்கைப்பட்டி பகுதி சாலைகளைக் கடந்து அருகிலுள்ள குடியிருப்புகள், விளைநிலங்களில் புகுந்துள்ளது. மேலும், கீழக்கோட்டைக்காரன்பட்டி, சிதம்பரத்தான்பட்டி குடியிருப்புகளிலும் வெள்ள நீா் புகுந்துள்ளது. இப்பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களை எம்எல்ஏ அலுவலகப் பணியாளா்கள் நகராட்சிப் பள்ளிகளில் தங்க வைத்து உணவு, உடை அளிக்கின்றனா்.

வெள்ளப் பாதிப்புகளை வட்டாட்சியா் த. சேக்கிழாா், ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள் அமிா்தவள்ளி ராமசாமி, குணசீலன், திமுக ஒன்றியச் செயலா் சி.ராமசாமி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com