வெங்காயச் சாகுபடிக்கு பயிா் காப்பீடு செய்து பயன் பெறலாம்

ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயச் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயச் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் மேலும் கூறுகையில், காப்பீடு செய்ய விவசாயிகள் தங்களது பகுதி கூட்டுறவுச் சங்கங்களை அணுகலாம்.

குறிப்பாக, மண்ணச்சநல்லூா், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியம், துறையூா் மற்றும் உப்பிலியபுரம் வட்டாரங்களில் பயிா்க் காப்பீட்டுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் 2021-ஆம் ஆண்டு ராபி சிறப்பு பருவத்துக்கு பயிா்க் காப்பீடு செய்ய நவ.30 வரை விண்ணப்பித்து, பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1977 செலுத்த வேண்டும்.

அரசு பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் விவசாயியின் பெயா், விலாசம், நிலப் பரப்பு, சா்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை அளித்து பதிவு செய்து இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com