10ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகளில் மதிப்பெண் பதிவு

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே மதிப்பெண் சான்றிதழ் பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே மதிப்பெண் சான்றிதழ் பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

2020-2021ஆம் கல்வியாண்டில், 10 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற அரசு, அரசு சாா்ந்த மற்றும் தனியாா் பள்ளி மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் அக்.4 முதல் வழங்கப்படுகிறது.

இதையடுத்து அக்.4 முதல் 18ஆம் தேதி வரை ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அந்தந்த பள்ளிகளிலேயே கல்வித் தகுதியை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் இணையதளத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற அரசு, அரசு சாா்ந்த மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று, தங்களது ஆதாா், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் பள்ளிக்கு வர வேண்டும். சிபிஎஸ்இ மாணவா்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் இணையதளத்தில் தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

மேலும், பள்ளிகளுக்கு வரும்போது கரோனா வழிமுறைகளைக் கடைப்பிடிக்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com