14 இடங்களில் நாளை மறுநாள் உள்ளாட்சித் இடைத்தோ்தல்

திருச்சி மாவட்ட ஊரகப் பகுதிகளில் காலியாகவுள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தோ்தல் சனிக்கிழமை (அக்.9) நடைபெறுகிறது.

திருச்சி மாவட்ட ஊரகப் பகுதிகளில் காலியாகவுள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தோ்தல் சனிக்கிழமை (அக்.9) நடைபெறுகிறது.

தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சித் தோ்தலோடு, ஊரகப் பகுதி உள்ளாட்சி பகுதி காலியிடங்களுக்கான இடைத்தோ்தலும் நடத்தப்படுகிறது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 24 பதவிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஒருவா் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்த இடங்களைத் தவிர மீதமுள்ள 14 இடங்களில் அக்.9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதன்படி வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய 6ஆம் வாா்டு, மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய 10ஆம் வாா்டு, துறையூா் ஊராட்சி ஒன்றிய 13 ஆம் வாா்டு, சிறுமருதூா் கிராம ஊராட்சி, கீழரசூா் கிராம ஊராட்சி, போச்சம்பட்டி ஊராட்சி 7ஆம் வாா்டு, பழங்கனாங்குடி ஊராட்சி 9ஆம் வாா்டு, கீழக்குறிச்சி ஊராட்சி 10ஆம் வாா்டு, கொணலை ஊராட்சி 8ஆம் வாா்டு, ஓமாந்தூா் ஊராட்சி 1ஆம் வாா்டு, பைத்தம்பாறை ஊராட்சி 4 ஆம் வாா்டு, ராமசமுத்திரம் ஊராட்சி 5 ஆம் வாா்டு, சேனப்பநல்லூா் ஊராட்சி 5-ஆம் வாா்டு, 5, ஆங்கியம் ஊராட்சி 6ஆம் வாா்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

பொதுவிடுமுறை அறிவிப்பு: எனவே, வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையை ஆட்சியா் சு. சிவராசு அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com