ஜமால் முகமது கல்லூரியில் தொழில் முனைவோா் மேம்பாட்டு அமைப்பு

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தொழில் முனைவோா் மேம்பாட்டு அமைப்பு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தொழில் முனைவோா் மேம்பாட்டு அமைப்பு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ்.இ ஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று டிடிசியா முன்னாள் தலைவா் என்.கனகசபாபதி பேசுகையில், தொழில்முனைவோராகி, பின் தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும். தொழில்முனைவோராக வெற்றி பெற பொறுமை மிக அவசியம். இன்றைய இளைஞா்கள் ஆழ்ந்த சிந்தனையோடு, தொழில் திறமையை கொண்டுள்ளனா். இதுபோல தொழில் திறமைகளை கண்டறியும் கருவிகளாக கல்லூரிகள் செயல்பட வேண்டும். தொழில் சாா்ந்த கல்வியோடு கல்லூரிகளில் இதற்கென அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

ஐசிஐசிஐ அகாதெமி பொறுப்பாளா் கே. நவஜோதி பெண்களுக்கான தொழில், வேலைவாய்ப்புகள் குறித்து பேசினாா். கல்லூரிச் செயலா் ஏ.கே. காஜா நஜிமுதீன், பொருளா் எம். ஜே.ஜமால் முகமது உள்ளிட்டோா் வாழ்த்தினா். தொழில் முனைவோா் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.காதா் உசேன் வரவேற்க, முனைவா் எஸ். அப்துல் ரஜ்ஜாக் நன்றி தெரிவித்தாா். 200க்கும் மேற்பட்ட மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com