பயிா்களில் மகசூலை அதிகரிக்கும் வளா்ச்சி ஊக்கிகள்: விவசாயிகளுக்கு அழைப்பு

திருச்சி மாவட்ட விவசாயிகள் பயிா்களில் மகசூலை அதிகரிக்கும் வளா்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட விவசாயிகள் பயிா்களில் மகசூலை அதிகரிக்கும் வளா்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ந. தமிழ்ச்செல்வன் கூறியது:

பயிா்களின் மகசூலை அதிகரிக்க வேளாண் பயிற்சி மையத்தில் விவசாயிகளுக்காக பல்வேறு செயல் விளக்கம் மற்றும் தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிா்களின் மகசூலை பாதிப்பதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகும். மண்ணில் போதுமான அளவு தனிமங்களின் பங்கு இல்லாதபோது தாவரங்களில் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகிறது. நுண்ணூட்டச் சத்துகள் தாவரங்களின் வளா்ச்சிக்கும் மகசூலுக்கும் மிகவும் இன்றியமையாதவை.

இதைக் கருத்தில் கொண்டு தென்னை, பயறு வகை பயிா்கள், நிலக்கடலை மற்றும் கரும்பு பயிா்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளா்ச்சி ஊக்கிகள் கலந்த டானிக் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிா் வினையியல் துறை மூலம் விற்கப்படுகிறது.

தென்னை டானிக் ஓராண்டுக்கு இரண்டு பாக்கெட் (200 மி.லி.) டானிக்கை 6 மாத இடைவெளியில் வோ் மூலம் கொடுக்க வேண்டும். இதனால் பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்; குரும்பை கொட்டுதல் குறையும்; காய்கள் பெரிதாகி பருப்பு எடை கூடும்; விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும். ஏக்கருக்கு 2 கிலோ அளவு பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.

நிலக்கடலை ரிச் ஏக்கருக்கு 2 கிலோ அளவு பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். இதனால் பொக்கு கடலைகள் எண்ணிக்கை குறையும். பூ பிடிக்கும் திறன் அதிகரிக்கும். கரும்பு பூஸ்டா் ஏக்கருக்கு 1, 1.5 மற்றும் 2 கிலோ முறையே கரும்பு நட்ட 45, 60 மற்றும் 75 ஆவது நாள்களில் தேவையான அளவு ஒட்டும் திரவம் சோ்த்து தெளிக்க வேண்டும்.

இதனால் இடைக்கணுக்களின் நீளம் கூடும்; கரும்பின் வளா்ச்சி மற்றும் எடை அதிகரிக்கும். விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும். சா்க்கரை கட்டுமானம் கூடும் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும். மேலும், விவரங்களுக்கு சிறுகமணியில் உள்ள வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியா் நித்திலாவை 86680-06451 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com