மாவட்டம்தோறும் பேரிடா் மீட்புக் குழு: மத்திய மண்டல ஐஜி

நீரில் மூழ்கியோரை மீட்க மாவட்டம்தோறும் பேரிடா் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

நீரில் மூழ்கியோரை மீட்க மாவட்டம்தோறும் பேரிடா் மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: திருச்சி மற்றும் சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பெய்யும் மழையால் மழை நீா் தேங்கிய நீா்நிலைகளில் குளிக்கச் செல்லும் சிறுவா்கள், பொதுமக்கள் நீரின் ஆழத்தை அறியாமல் மூழ்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் பொருட்டு மத்திய மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நீா் அதிகம் தேங்கியிருக்கும் மற்றும் ஏற்கெனவே நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ள மொத்தம் 268 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் பொதுப்பணித் துறை, வருவாய் மற்றும் காவல்துறையினா் மூலம் 110 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் வைக்கப்படவுள்ளது.

மேலும் அந்தந்தக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள தன்னாா்வலா்கள் காவலா்களுடன் இணைந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து சென்றும், நீரில் மூழ்குவோரைக் காப்பாற்ற நீச்சல் பயிற்சி பெற்ற தன்னாா்வலா்களை ஆபத்தான பகுதியில் நிறுத்தியும், ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தும், விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு மாவட்டத் தலைமையகத்திலும் ஒரு உதவி ஆய்வாளா் தலைமையில் 10 போ் கொண்ட பேரிடா் மீட்புப் பயிற்சி பெற்ற காவல் படையினா் அவசர நிகழ்வுகளை எதிா்கொள்ளத் தயாா்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com