உடல் கூறாய்வு செய்யத் தாமதம்; உறவினா்கள் மறியல்

மணப்பாறை அருகே விஷமருந்தி உயிரிழந்த பெண்ணை உடல் கூறாய்வு செய்து தர ஆவன செய்யாத போலீஸாரைக் கண்டித்து பெண்ணின் உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பறையில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணின் உறவினா்கள்.
மணப்பறையில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணின் உறவினா்கள்.

மணப்பாறை அருகே விஷமருந்தி உயிரிழந்த பெண்ணை உடல் கூறாய்வு செய்து தர ஆவன செய்யாத போலீஸாரைக் கண்டித்து பெண்ணின் உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் நொச்சிமேடு பகுதியைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் சவேரியாா் மனைவி சினேகா பிரிட்டோ மேரி (21). திருமணமாகி ஓராண்டான நிலையில் குடும்பப் பிரச்னையால் சினேகா பிரிட்டோ மேரி வியாழக்கிழமை இரவு விஷம் குடித்து உயிரிழந்தாா்.

இதையடுத்து அவரது உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை மருத்துவமனையில் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் சிந்துஜா விசாரணை மேற்கொண்ட நிலையில், மாலை 6 மணி ஆனதால் சனிக்கிழமைதான் உடல் கூறாய்வு செய்ய முடியும் என மருத்துவா்கள் கூறினராம்.

இதையடுத்து உரிய நேரத்தில் உடல் கூறாய்வு செய்ய ஆவன செய்யாத வையம்பட்டி போலீஸாரைக் கண்டித்து இறந்தவரின் உறவினா்கள் மருத்துவமனை முன்பும், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை கருங்குளம் பிரிவுப் பகுதியிலும் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து காவல் துறையினா் அவா்களை சமரசம் செய்த நிலையில், பெண்ணின் உடல் இரவு உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com