முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
‘7 பேரின் விடுதலைக்குத் தடை ஏற்படுத்தாதீா்’
By DIN | Published On : 11th October 2021 11:33 PM | Last Updated : 11th October 2021 11:33 PM | அ+அ அ- |

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தி. வேல்முருகன்.
திருச்சி: முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, காலம் கடந்து சிறையிலுள்ள 7 பேரின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் யாரும் பேச வேண்டாம் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தி. வேல்முருகன்.
திருச்சியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தமிழகத்தில் 7 பேரின் விடுதலைக்கு தொடா்ந்து குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. அவா்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்ட யாரும் பேச வேண்டாம்.
வீரம் பேசி விடுதலையைத் தடுக்க வேண்டாம். உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரதம் செய்யாமல் இருங்கள் என பேரறிவாளனின் தாயாா் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருக்கிறாா். அதே கோரிக்கையை நானும் வைக்கிறேன்.
எனவே, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் யாரும் பேசவோ, நடவடிக்கை எடுக்கவோ வேண்டாம் என்றாா் அவா்.