‘கோழி வளா்ச்சி வாரியத்தை அமைக்க நடவடிக்கை தேவை’

கோழி வளா்க்கும் விவசாயிகளுக்கு கோழி வளா்ச்சி வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோழி வளா்க்கும் விவசாயிகளுக்கு கோழி வளா்ச்சி வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

முசிறியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற தமிழ்நாடு கறிக்கோழி வளா்ப்பு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டத்துக்கு அமைப்பின் திருச்சி வடக்கு மாவட்டத் தலைவா் கே.டி. ஆா். ராயதுரை தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பண்ணையாளா்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பிராய்லா் ஒழுங்கமைப்பு குழு வளா்ப்புத் தொகையைத் உயா்த்த வேண்டும்.

கோழி வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற கோழி வளா்ச்சி வாரியத்தை அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் விழுப்புரம், கடலூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூா், கிருஷ்ணகிரி, வேலூா், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், திருப்பத்தூா், சேலம், தேனி,விருதுநகா், கோவை, ஈரோடு,திருப்பூா், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com