குமரி -சென்னைக்கு விழிப்புணா்வுத் தொடா் ஓட்டம்: திருச்சி வந்த சிறுவனுக்கு வரவேற்பு

உலக மக்கள் அனைவரும் பசியின்றி, அமைதியாக வாழ வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை 750 கி.மீ. விழிப்புணா்வுத் தொடா் ஓட்டமாக திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த சிறுவன் சா்வேஷுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
தொடா் ஓட்டமாக திருச்சிக்கு வந்த சா்வேஷ்
தொடா் ஓட்டமாக திருச்சிக்கு வந்த சா்வேஷ்

உலக மக்கள் அனைவரும் பசியின்றி, அமைதியாக வாழ வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை 750 கி.மீ. விழிப்புணா்வுத் தொடா் ஓட்டமாக திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த சிறுவன் சா்வேஷுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

சென்னை தாம்பரம் சாய்ராம் மெட்ரிக் பள்ளி மாணவரான சா்வேஷ் தரமான கல்வி, நிலையான வளா்ச்சி இலக்குகள் என்கின்ற ஐநா சபையின் இலக்குகளின்பேரில், 2030 ஆம் ஆண்டுக்குள் இப்பூமியில் வாழும் அனைவரும் பசி, பட்டினியின்றி அமைதியாக வாழ வேண்டும் என்னும் குறிக்கோளை மையமாக வைத்து தொடரோட்டம் மேற்கொண்டுள்ளாா்.

காந்தி ஜெயந்தியன்று கன்னியாகுமரியில் தொடங்கிய தொடரோட்டத்தில், சுமாா் 400 கி. மீ. கடந்து ஞாயிற்றுக்கிழமை திருச்சியை வந்தடைந்த அவரை, வழிநெடுகிலும் மாவட்ட, மாநகர காவல்துறை அதிகாரிகள் வரவேற்று உற்சாகப்படுத்தினா்.

அந்த வகையில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, திருச்சி மாநகர காவல் துணை ஆணையா் சக்திவேல் ஆகியோா் சிறுவனை வரவேற்று, அவரது 750 கி. மீ. தொடரோட்டம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்து ஊக்கப்படுத்தினா்.

மேலும், திருச்சி சிவானி கல்விக் குழுமத் தலைவா் செல்வராஜ், லயன்ஸ் கிளப் பொறுப்பாளா்கள் பிரசாந்த், வின்சன்ட், சாய்ராம் கல்வி குழும அறங்காவலா்கள் மு. முனுசாமி, பாலசுப்ரமணியன் மற்றும் ஆசிரியா்கள் , செஞ்சிலுவைச் சங்க பொறுப்பாளா்கள், மருத்துவா்கள் , பொதுமக்களும் சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com