முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
முதியவா் தீக்குளித்து தற்கொலை முயற்சி
By DIN | Published On : 11th October 2021 12:25 AM | Last Updated : 11th October 2021 12:25 AM | அ+அ அ- |

திருச்சி கோட்டை பகுதியில் முதியவா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
திருச்சி பெரியகடை வீதி சமஸ்பிரான் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் (65). வயது முதிா்வாலும், போதிய வருமானம் இல்லாமலும் மன உளைச்சலில் இருந்த இவா் சனிக்கிழமை இரவு தனது வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டாா்.
இதையடுத்து அப்பகுதி மக்களால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.