புதைசாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளைச் சீரமைக்கக் கோரிக்கை

திருச்சியில் கடந்த பல மாதங்களாக புதைசாக்கடைத் திட்டப் பணிகளுக்காக தோண்டி மூடப்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில் உள்ள சாலைகளை தற்காலிகமாவது சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் கடந்த பல மாதங்களாக புதைசாக்கடைத் திட்டப் பணிகளுக்காக தோண்டி மூடப்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில் உள்ள சாலைகளை தற்காலிகமாவது சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் புதைசாக்கடைத் திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிந்துவிட்டன. இணைப்பு கொடுக்கும் பணி மட்டுமே பாக்கி.

ஆனால் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்த பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அவற்றை புதிதாக உடனே அமைக்கவும் இயலாது என்பதால், தாற்காலிகமாகவது சீரமைக்க வேண்டும் என பல்வேறு பகுதிகளிலும் கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

பல பகுதிகளிலும் சேறும் சகதியுமாக நடந்தோ, வாகனங்களோ செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. குறிப்பாக, தற்போது பணிகள் நடைபெறும் திருச்சி , விமான நிலையம் அந்தோணியாா் கோயில் தெரு, பிலிகான் கோயில் தெரு, பாரதி நகா், அம்பிகை நகா், உள்ளிட்ட விமான நிலைய சுற்றுப்புறப் பகுதிகள் அனைத்தும் இதில் அடக்கம்.

தற்போது மழைக் காலம் தொடங்கியுள்ளதால் இதுபோன்ற பகுதிகளில் குறைந்தபட்சம் கிராவல் மண் அடித்து பள்ளங்களைச் சீராக்க வேண்டும். பின்னா் புதிய சாலைகள் அமைக்கலாம் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com