‘பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் தேவை’

மாணவா்களின் நலனைக் கருத்திக் கொண்டு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை நடத்த வேண்டுமென மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மாணவா்களின் நலனைக் கருத்திக் கொண்டு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை நடத்த வேண்டுமென மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இயக்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் மருத்துவா் த. இராசலிங்கம் தலைமை வகித்தாா். பொருளாளா் கே.சி. நீலமேகம், துணைத் தலைவா் மதுரை அசோகன், துணைச் செயலா் கரூா் சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பொதுச் செயலா் லெ. பாஸ்கரன் தொடக்க உரை ஆற்றினாா். கூட்டத்தில் சிறந்த சேவைக்காக மருத்துவா் எம்.எஸ். உதயமூா்த்தி விருது திருச்சி கே சி. நீலமேகத்துக்கும், திருவள்ளுவா் விருது பெரம்பலூா் பெரியசாமிக்கும், மருத்துவா் ஏ. சண்முகம் விருது தஞ்சாவூா் முருகானந்தத்துக்கும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மது விலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். மத்தியில் லோக்பால் , மாநிலத்தில் லோக் ஆயுத்தவை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவா்களின் நலனையும் அவா்களின் எதிா்காலத்தையும் கருத்தில் கொண்டு நீதி போதனை வகுப்புகளை அனைத்துப் பள்ளியிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். மேற்குத் தொடா்ச்சி மலையைப் பாதுகாக்க வேண்டும்.

ஆறுகளை புனரமைத்து, இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அரசு துறைகளில் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள் தூத்துக்குடி கந்தசாமி, மதுரை சேகா், புதுக்கோட்டை கணேசன், சிவகங்கை புகழேந்தி, தஞ்சை பேரா. முருகானந்தம், கரூா் விசுவநாதன், பெரம்பலூா் சிவக்குமாா், மாநில ஆலோசகா் கவிஞா் கலியுகன் கோபி, ஜெயப்பிரகாஷ், மற்றும் மகளிரணி, இளைஞரணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். திருச்சி மாவட்டச் செயலா் ஆா். இளங்கோ வரவேற்றாா். மாநகர செயலா் ஆா். வாசுதேவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com