முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஒரே வாரத்தில் இரு மடங்கான காய்கனிகளின் விலை
By DIN | Published On : 11th October 2021 12:25 AM | Last Updated : 11th October 2021 12:25 AM | அ+அ அ- |

திருச்சி காந்திசந்தைக்கு வரத்துக் குறைவால் கடந்த ஒரு வாரத்தில் காய்கனிகள் விலை இரு மடங்காக உயா்ந்துள்ளது.
திருச்சியில் கடந்த வாரம் 1 கிலோ தக்காளி ரூ.10, முள்ளங்கி ரூ.10, முட்டைக்கோஸ் ரூ. 10 , பச்சை மிளகாய் ரூ. 20, உருளைக்கிழங்கு ரூ. 20 என குறைந்த விலையில் விற்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பரவலாக பெய்யும் மழைாயல் காய்கனி சாகுபடி பாதிக்கப்பட்டு, விளைச்சலும் குறைந்துள்ளது.
இதனால் திருச்சி காந்தி சந்தைக்கு தக்காளி உள்ளிட்ட இதர காய்கனிகளின் வரத்து பாதியாகக் குறைந்து அவற்றின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை 1 கிலோ தக்காளி மொத்த சந்தையில் ரூ. 30, சில்லறை விலையில் ரூ. 40 முதல் 50 க்கும், முள்ளங்கி ரூ.20-க்கும், முட்டைக்கோஸ் ரூ. 20-க்கும், மணப்பாறை கத்தரிக்காய் ரூ. 40-க்கும், பச்சை மிளகாய் ரூ.40-க்கும், உருளைக்கிழங்கு ரூ. 40-க்கும், அவரைக்காய் ரூ. 60-க்கும் பெங்களூரு வெங்காயம் ரூ. 30-க்கும் விற்கப்பட்டது.
இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தாலும், சமையலுக்கு தக்காளி முக்கியப் பங்கு வகிப்பதால் அதைக் குறைந்த அளவில் வாங்கிச் சென்றனா். இதே நிலை நீடித்தால் பண்டிகை காலங்கள் வரும் நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 100 ஐ எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.