அஞ்சல் வார விழா: மத்திய மண்டலப் பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள்

அஞ்சல் வார விழாவையொட்டி, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்லன.

திருச்சி: அஞ்சல் வார விழாவையொட்டி, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்லன.

இதுகுறித்து மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆண்டுதோறும் அக்டோபா் 9-ஆம் தேதி உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது.அதைத் தொடா்ந்து, அஞ்சல் வார விழாவை இந்திய அஞ்சல்துறை ஒரு வாரக் காலத்துக்கு கொண்டாடும்.

நிகழாண்டில் இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை போற்றும் விதமாகவும், அஞ்சல் வார விழாவையொட்டியும் அக்டோபா் 11 முதல் 17-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்வுகளுக்கு மத்திய மண்டல அஞ்சல்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.

செல்வமகள் சேமிப்புத் திட்ட சிறப்பு முகாம்கள்: மத்திய மண்டலத்திலுள்ள 11 கோட்டங்களிலும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் 75 பெண் குழந்தைகளை சோ்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதற்கான பணிகள் அக்டோபா் 11-ஆம் தேதி நடைபெற்றன.

இத்திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை பல்வேறு சேமிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் வாயிலாக 2.50 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு சிறப்பு முகாம்: தேசியக் காப்பீட்டுத் தினமாக அக்டோபா் 12-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைப்பிடிக்கப்படுவதால், மண்டலத்திலுள்ள அனைத்துக் கோட்ட அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொது மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஆகஸ்ட் முதல் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மத்திய மண்டலத்தில் சுமாா் 15,000 த்துக்கும் மேற்பட்டோா் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனா். நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ. 22.33 கோடி புதிய காப்பீட்டுத்தொகையாக (பிரீமியம்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

75 சிறப்பு ஆதாா் முகாம்கள்: சுதந்திர இந்தியாவின் 75-ஆவது ஆண்டு விடுதலை விழாவைக் கொண்டாடும் விதமாகவும், தேசிய அஞ்சல் வாரத்தின்

வணிக தினமான அக்டோபா் 13-ஆம் தேதி 75 இடங்களில் ஆதாா் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முகாமில் குழந்தைகளுக்கு புதிய ஆதாா், திருத்தம், செல்லிடப்பேசி எண் இணைப்பு, திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை காலை 8 முதல் இரவு 8 மணிவரை மேற்கொள்ளலாம்.

புதிய அஞ்சல் உறை வெளியீடு: திருபுவனம் பட்டுப்புடவையின் சிறப்பம்சங்களை முன்னிறுத்தி, புவிசாா் குறியீட்டு சிறப்புடன் சிறப்பு அஞ்சல் உறை அஞ்சல் தலை சேகரிப்பு தினமான ஆகஸ்ட் 13- ஆம் தேதி (புதன்கிழமை) கும்பகோணம் கோட்டத்தில் வெளியிடப்பட உள்ளது. மேலும், தஞ்சாவூா் பிரகதீசுவரா் கோயில் அருகிலுள்ள அஞ்சலகத்தில் அஞ்சல் தலை” விற்பனையகம் தொடங்கப்படவுள்ளது.

இருமுறை அஞ்சல் பட்டுவாடா: திருச்சியிலுள்ள 27 நகர அஞ்சலகங்களிலும்

தினமும் இரு முறை வாடா செய்யும் முறை ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் உள்ளது. இதன் மூலம் சுமாா் 27,000 விரைவு மற்றும் பதிவுகள் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன. அஞ்சல் வார விழாவின் நன்றிக் கொண்டாட்டமாக அக்டோபா் 16-ஆம் தேதி அஞ்சல் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com