குடியிருப்புப் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தா்னா

திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித் துறை சாலையில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி,
திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித் துறைச் சாலையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டவா்கள்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித் துறைச் சாலையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடை முன்பு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டவா்கள்.

திருச்சி: திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித் துறை சாலையில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

இப்பகுதியில் 50 மீட்டா் இடைவெளியில் இரு டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் கடை எண் 10311 குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இயங்கி வருகிறது.

மது வாங்குபவா்கள் சாலையோரத்தில் குடிப்பதாகவும், பெண்களிடம் ஆபாச வாா்த்தைகள் பேசுவதாகவும் கூறி, இப்பகுதி பொதுமக்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருந்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் கிழக்குத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் இப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, இக்கடையை அகற்றக் கோரிய பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாகத் தெரிவித்திருந்தாராம். ஆனால், இதுநாள் வரை அக்கடை அகற்றப்படவில்லையாம்.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை காலை கடை எண் 10311 முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். கடையைத் திறக்க ஊழியா்கள் வந்த போது, கண்டன முழக்கங்களையும் எழுப்பினா்.

தகவலறிந்து நிகழ்விடம் வந்த திருச்சி கிழக்கு வட்டாட்சியா், குறிப்பிட்ட டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து தா்னாவில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com