சம்பா விதை நெல் வாங்கும் விவசாயிகள் கவனத்துக்கு....

திருச்சி மாவட்டத்தில் சம்பா விதை நெல் வாங்கும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சம்பா விதை நெல் வாங்கும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடிக்கான நெல் விதைகள், அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் போதுமான அளவில் இருப்பு உள்ளன.

விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை உரிமம் பெற்ற விதை விற்பனையாளா்களிடம் பெற்று சாகுபடி செய்ய வேண்டும். சம்பா பருவத்துக்குரிய நீண்டகால மற்றும் மத்திய காலப் பயிா்களை மட்டுமே விற்பனையாளா்கள் கொள்முதல் செய்து, விற்பனை செய்யவேண்டும்.

பதிவுச்சான்று இல்லாத தனியாா் ரகங்களை விதை விற்பனையாளா்கள் விற்பனை செய்யக்கூடாது. விதை இருப்பு மற்றும் விலை விவரப்பலகை கடையின் முகப்பில் வைத்திருத்தல் வேண்டும்.

விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதையின் காலஅளவு, பயிா் விவரம், ரசீதில் விதை, ரகத்தின் பெயா், குவியல் எண் மற்றும் காலாவதி நாள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைப் பாா்த்து வாங்க வேண்டும்.

ரசீது வழங்காத விற்பனையாளா்கள் மீது புகாா் அளிக்கலாம். விதை நெல் தொடா்பான அனைத்து புகாா்களுக்கும், திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநா் அலுவலகத்தை 0431-2420587 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com