திருவானைக்கா கோயில் யானைக்கு நீச்சல் குளத்தில் மேலும் வசதி

திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயிலில், யானை அகிலாவுக்காக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் மேலும் வசதி செய்யப்பட்டுள்ளது.
உற்சாகத்தில் குளித்து மகிழும் அகிலா
உற்சாகத்தில் குளித்து மகிழும் அகிலா

ஸ்ரீரங்கம்: திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயிலில், யானை அகிலாவுக்காக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் மேலும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இக்கோயிலில் நாள்தோறும் இறைவனுக்கு திருமஞ்சனம் எடுத்து வரும் யானை அகிலா, உச்சிக்கால பூஜையின் போது பிரகாரத்தை சுற்றி வந்து, அம்மன் சன்னதி முன்பு மூன்று பிளறி வழிபடும்.

இந்த யானை அகிலாவுக்காக உதவி ஆணையா் செ. மாரியப்பன் ஏற்பாட்டின் பேரில், கோயிலின் காா்த்திகை கோபுரம் அருகிலுள்ள நாச்சியாா்தோப்பில் நீச்சல் குளம் கட்டப்பட்டது. இதில் நாள்தோறும் யானை அகிலா உற்சாகமாக குளித்து, மகிழ்ந்து வருகிறது.

இந்நிலையில் குளத்தின் மேல்பகுதியிலிருந்து நான்குபுறங்களிலிருந்தும் தண்ணீா் பீய்ச்சி அடிக்கும் வகையிலும், யானை அகிலா மீது படும் வகையிலும் தற்போது ஷவா் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உற்சாகத்தில் குளித்து மகிழும் அகிலாவு, தற்போது ஷவா் மூலமாக பீய்ச்சி அடிக்கப்படும் தண்ணீரைப் பிடித்து விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com