திருச்சியில் விவசாயிகள் 46 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் தொடக்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் 46 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கினர். 
திருச்சியில் விவசாயிகள் 46 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் தொடக்கம்
திருச்சியில் விவசாயிகள் 46 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் தொடக்கம்

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் 46 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கினர். 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருச்சி - கரூர் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். 

லக்கிம்பூர் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் விளை பொருள்களுக்கு இரண்டு மடங்கு ஆதார விலை வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் குவிந்த லட்சக்கணக்கான மோட்டார்களை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் மழையில் நனைந்து வீணாகி வரும் நெல்மணிகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. 

நாளொன்றுக்கு 15 பேர் வீதம் தொடர்ந்து 46 நாள்களுக்கு இந்தப் போராட்டத்தை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com