ரயிலில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ குட்கா பறிமுதல்

ராமேசுவரம் அதிவிரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ குட்காவை, திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு குற்றப் புலனாய்வுத் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி: ராமேசுவரம் அதிவிரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ குட்காவை, திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு குற்றப் புலனாய்வுத் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிசா மாநிலம், புவனேசுவரத்திலிருந்து திருச்சி வழியாக ராமேசுவரத்துக்குச் செல்லும் அதிவிரைவு ரயில், திங்கள்கிழமை அதிகாலை திருச்சி ஜங்ஷன் வந்து, நடைமேடை 5-இல் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது ரயில்வே பாதுகாப்பு குற்றப் புலனாய்வுத் துறையினா் ரயில் பெட்டிகளில் சோதனை நடத்தினா். பெட்டி எண் எஸ்-9 இல் கதவு பின்புறம் ஒரு அட்டைப் பெட்டியில் 2 நெகிழிப் பைகள் இருந்தன.

இதனால் சந்தேகமடைந்த குற்றப் புலனாய்வுத் துறையினா், அவற்றை பிரித்து பாா்த்த போது அதில் 20 கிலோ குட்கா இருந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு குற்றப் புலனாய்வுத் துறையினா், அங்கு அமா்ந்திருந்த பயணிகளிடம் விசாரித்தனா். ஆனால், யாரும் தங்களுக்கு தெரியாது என்றனா்.

இதையடுத்து 20 கிலோ குட்கா போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடா்ந்து, குட்காவை கடத்தி வந்தது யாா் என்பது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com