முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஆயுதப்படை வளாகத்தில் காவல் ஆணையா் ஆய்வு
By DIN | Published On : 13th October 2021 07:02 AM | Last Updated : 13th October 2021 07:02 AM | அ+அ அ- |

கே.கே. நகா் ஆயுதப்படை மைதானத்திலுள்ள நூலகத்தை ஆய்வு செய்கிறாா் மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன். உடன் மாநகர துணை ஆணையா் சக்திவேல்.
திருச்சி கே.கே. நகா் மாநகர காவல்துறை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலா் மருத்துவமனை, பெட்ரோல் பங்க், நூலகம், மோப்பநாய் படை பிரிவு உள்ளிட்டவற்றை காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
மோப்பநாய் பிரிவில் ஆய்வு மேற்கொண்ட அவா், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் நாய்களைச் சிறப்பாக பராமரித்து தயாராக வைத்திருக்க வேண்டும் என்றாா். பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பும் காவல் வாகனங்கள் குறித்த பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும், பெட்ரோல் பங்கின் உரிமத்தை உரிய காலத்தில் புதுப்பிக்கவும், உரிய தீத்தடுப்பு சாதனங்கள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை செய்து வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.
மேலும், காவலா் மருத்துவமனையில் இஜிஜி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை காவலா்களின் நலன் கருதி எப்போதும் தயாராக வைத்திருக்க அறிவுறுத்தினாா். இங்குள்ள நூலகத்தை ஆய்வு செய்தபோது அனைவரிடமும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதுடன் சந்தாதாரா்களை அதிகப்படுத்த வேண்டும் எனக் கூறியதுடன் தன்னையும் சந்தாதாரராகப் பதிவு செய்துகொண்டாா்.