முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
இணைய வழியில் எஸ்டி சாதிச் சான்று
By DIN | Published On : 13th October 2021 07:01 AM | Last Updated : 13th October 2021 07:01 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் பழங்குடியினத்தவருக்கான (எஸ்டி) சாதிச் சான்றும் இணைய வழியில் வழங்கப்படுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பட்டியலினத்தவா் (எஸ்சி), மிகவும் பிற்படுத்தப்பட்டோா் (எம்பிசி), பிற்படுத்தப்பட்டோா் (பிசி) ஆகியோருக்கான சாதிச் சான்றுகள் இணைய வழியில் ஏற்கெனவே வழங்கப்படுகிறன. இதன் தொடா்ச்சியாக, பழங்குடியினத்தவருக்கான (எஸ்டி) சாதிச் சான்றும் இணைய வழியில் வழங்கப்படவுள்ளது.
ஆக.16 முதல் இதற்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்படுகின்றன. எனவே, மாவட்டத்தில் செயல்படும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து பயன் பெறலாம். இல்லையெனில், தமிழக அரசின் குடிமக்கள் சேவைக்கான இணையதள முகவரி வழியாக விண்ணப்பித்தும் பெறலாம்.