முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
குடும்பத் தகராறில் பெண் தற்கொலை
By DIN | Published On : 13th October 2021 07:00 AM | Last Updated : 13th October 2021 07:00 AM | அ+அ அ- |

திருச்சியில் குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி காந்திமாா்க்கெட் அருகேயுள்ள எடத்தெரு சாலை பிள்ளைமாநகா் பகுதியைச் சோ்ந்தவா் சுமை தூக்கும் தொழிலாளி ரகுமான். இவரது மனைவி சரிதா (30). இவா்களுக்கு ஆண், பெண் என 2 குழந்தைகள் உள்ளன.
அதிகாலை பணிக்குச் சென்ற ரகுமான் வீடு திரும்பியபோது, வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவா் அக்கம் பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்துப் பாா்த்தபோது மனைவி தூக்கில் சடலமாகக் தொங்கினாா்.
புகாரின்பேரில் காந்திமாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். குடும்பத் தகராறில் சரிதா தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.