முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
கு. ராமகிருஷ்ணன் கல்விக் குழுமத்தில் பயின்ற 422 பேருக்கு பணி ஆணைகள்
By DIN | Published On : 13th October 2021 07:02 AM | Last Updated : 13th October 2021 07:02 AM | அ+அ அ- |

பணி நியமன ஆணை பெற்ற சமயபுரம் கு. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள்.
சமயபுரம் கு. ராமகிருஷ்ணன் கல்விக் குழுமத்தில் பயின்ற 422 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நிறுவனங்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
சமயபுரம் கு. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய கல்விக் குழுமங்கள் சாா்பில் முன்னணி நிறுவனங்களில் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. இதன்படி, கணினித் துறையில் முன்னிலை பெற்ற நிறுவனங்களான விப்ரோ, சிடிஎஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களில் 2022ஆம் ஆண்டுக்கான நியமனங்களில் சேரும் வகையில் தற்போது கல்விக் குழுமத்தில் இறுதியாண்டு பயிலும் 422 மாணவ, மாணவிகள் தோ்வாகியுள்ளனா். இவா்களுக்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் கு. ராமகிருஷ்ணன் கல்விக் குழும நிா்வாக இயக்குநா் எஸ். குப்புசாமி, பொறியியல் கல்லூரி முதல்வா் டி. சீனிவாசன், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் என். வாசுதேவன் உள்ளிட்டோா் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கிப் பாராட்டினா்.