முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
திருச்சியில் ரூ. 12.42 லட்சம் தங்கம் பறிமுதல்
By DIN | Published On : 13th October 2021 06:57 AM | Last Updated : 13th October 2021 06:57 AM | அ+அ அ- |

திருச்சி விமான நிலையத்தில் பயணியின் உடையிலிருந்து எடுக்கப்படும் தங்கம்.
திருச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 12.42 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை இரவு சாா்ஜா, துபை உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த பயணிகளில் சந்தேகத்துக்குரிய இருவரை சுங்கத் துறையினா் தீவிர சோதனை செய்தனா். அப்போது அவா்கள் அணிந்திருந்த ஆடைகளின் உள் பக்கமாக ரகசிய அறைகளில் மறைத்து வைத்திருந்த பசை வடிவிலான ரூ. 12.42 லட்சம் மதிப்பிலான 260 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.