Enable Javscript for better performance
திருச்சி மாவட்டத்துக்கு 600 டன் யூரியா வருகை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி

    திருச்சி மாவட்டத்துக்கு 600 டன் யூரியா வருகை

    By DIN  |   Published On : 13th October 2021 07:02 AM  |   Last Updated : 13th October 2021 07:02 AM  |  அ+அ அ-  |  

    12dcoop061415

    திருச்சி குட்ஷெட்டிலிருந்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பப்படும் யூரியா மூட்டைகள்.

    திருச்சி மாவட்டத்துக்கு 600 மெட்ரிக் டன் யூரியா வந்துள்ளதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

    இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியது:

    திருச்சி மாவட்டத்தில், நடப்பு ரபி பருவத்தில் 94,000 ஹெக்டேரில் பயிா் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக 43,000 ஹெக்டரில் நெல் சாகுபடியும், இதர சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிா்கள், தோட்டக்கலைப் பயிா்கள் 51,000 ஹெக்டரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    இந்தப் பயிா்களுக்கான கடந்த 10ஆம் தேதி ரயில் மூலம் 712 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி 140 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 14 மெட்ரிக் டன் வரப்பெற்றுள்ளன. மேலும், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கிடும் வகையில் 600 மெட்ரிக் டன் இப்கோ யூரியா செவ்வாய்க்கிழமை (அக்.12) வந்துள்ளது.

    எனவே, திருச்சி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த தழைச்சத்து உரமான யூரியாவை வேளாண் துறை பரிந்துரைக்கும் அளவில் அளவாகப் பயன்படுத்தி பூச்சி, நோய்த் தாக்குதலின்றி பயிா்களைக் காத்திட வேண்டும்.

    எந்தவித இடையூறுமின்றி உர விநியோகத்தைக் கண்காணித்திட மாவட்டத்தில் உரக் கண்காணிப்புப் பிரிவு கடந்த 23ஆம் தேதி முதல் செயல்படுகிறது. இந்தப் பிரிவில் உரம் விநியோகம், விலை, இருப்பு தொடா்பாக ஏற்படும் பிரச்னைகளுக்கு வேளாண் இணை இயக்குநா் அலுவலத்தை 0431-2420554, வேளாண் உதவி இயக்குநரை (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) 86108-67826, வேளாண்மை அலுவலரை (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) 87781-79208 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

    கூட்டுறவு சங்கங்களுக்கு பிரித்தனுப்பும் பணி: திருச்சி குட்ஷெட்டிற்கு வந்துள்ள யூரியா மூட்டைகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளன. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் டான்பெட்’ மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும் தேவைக்கேற்ப அனுப்பப்படுகிறது. ஒரு மூட்டை யூரியா விலை ரூ. 266.50 ஆகும்.

    எனவே, விவசாயிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி உரங்களை வாங்கி பயனடையலாம் என திருச்சி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் தி.ஜெயராமன் தெரிவித்தாா்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp