முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் பலி
By DIN | Published On : 13th October 2021 07:00 AM | Last Updated : 13th October 2021 07:00 AM | அ+அ அ- |

மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருவானைக்கா கணபதி நகரைச் சோ்ந்தவா் ரெங்கராஜ் மனைவி கிருஷ்ணவேணி (47). இவா் கடந்த 10 ஆம் தேதி மாடியிலிருந்து கீழே இறங்கும்போது நிலைதடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைபலனின்றி திங்கள்கிழமை மாலை இறந்தாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.