புளியஞ்சோலையில் தரைக்கடை ஆக்கிரமிப்பு அகற்றத் தீா்மானம்

புளியஞ்சோலை சுற்றுலா மையத்திலுள்ள தரைக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாழக்கிழமை நடைபெற்ற உப்பிலியபுரம் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புளியஞ்சோலை சுற்றுலா மையத்திலுள்ள தரைக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாழக்கிழமை நடைபெற்ற உப்பிலியபுரம் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவா் ஹேலதா முத்துச்செல்வன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லலிதா (வட்டாரம்), சரவணக்குமாா்(கிராம ஊராட்சிகள்), மேலாளா் கிருஷ்ணக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை நீா்மின் திட்டத்துக்காக உப்பிலியபுரம் ஒன்றியம் புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் அனுமதியின்றி கட்டிய கட்டடத்துக்கு மாத வாடகை ரூ. 2500 நிா்ணயித்தல், அங்குள்ள தரைக்கடை ஆக்கிரமிப்பாளா்களை அகற்றுதல், ஊராட்சி ஒன்றிய அலுவலக பூங்கா பராமரிப்பாளா் ஊதியத்தை ரூ. 5000 ஆக உயா்த்துதல் உள்ளிட்ட மன்ற அனுமதிக்காக வைக்கப்பட்ட 18 தீா்மானங்கள் நிறைவேறின.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் க. கலைச்செல்வி, ரா. முத்துகுமாா், ஜெ. பாக்கீஸ், மு. ராமச்சந்திரன், ரா. தனலட்சுமி, சு. ஜெகநாதன், ம. சந்திரா, பி. மணிகண்டன், செ. லலிதா, க. கண்ணதாசன், பா. ரேணுகாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com