மது, கள்ளச்சாராய பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி

திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மதுபானங்கள் மற்றும் கள்ளச் சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மதுபானங்கள் மற்றும் கள்ளச் சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியைத் தொடக்கி வைத்த ஆட்சியா் சு. சிவராசு பின்னா் கூறியது:

மதுபானங்கள், கள்ளச்சாராயம் அருந்துவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, அவரது குடும்பத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மகிழ்ச்சியாக வாழும் வகையில், மது அருந்தும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

மாவட்டத்தில் மதுபானங்கள், கள்ளச் சாராயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், 6 கலைக்குழுவினா் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள், நாடகங்களை நடத்தி வருகின்றனா்.

வாகன ஓட்டுநா்களிடையே மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மது அருந்தாமல் வாகனம் ஓட்டுதல் குறித்து எடுத்துரைத்தல், அனைத்து வட்டங்களிலும் மகளிா் சுய உதவிக்குழுவினா் மூலமாக விழிப்புணா்வுத் துண்டுப்பிரசுரங்கள் வழங்குதல், மாணவா்களிடையே கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்துதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கள்ளச் சாராயம் வியாபாரம் செய்து தண்டனை பெற்று, பின்னா் மனம் திருந்தியவா்கள் பெட்டிக் கடை நடத்திட, தலா ஒருவருக்கு ரூ.30 ஆயிரம் நிதியுதவி, ஆடு அல்லது கறவை மாடுகள் வழங்குதல் என பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறன என்றாா் அவா்.

நிகழ்வில் கலால் உதவி ஆணையா் சு. ராமன், காவல் துணைக் கண்காணிப்பாளா்முத்தரசு, கோட்ட கலால் அலுவலா்கள் பிரகாஷ், சத்தியநாராயணன், அலுவலக மேலாளா் சித்ரா, காவல் ஆய்வாளா்கள் கவிதா, சுமதி, மற்றும் திருச்சி பெரியாா் ஈ.வெ.ரா கல்லூரி மாணவா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ஆட்சியரகத்தில் தொடங்கிய பேரணி, ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com