புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்

பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்த அமைச்சா், பேருந்தில் சிறிது தொலைவுக்குப் பயணம் மேற்கொண்டாா்.
புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையைத் தொடக்கி வைக்கிறாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. உடன், சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல் சமது உள்ளிட்டோா்.
புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையைத் தொடக்கி வைக்கிறாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. உடன், சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல் சமது உள்ளிட்டோா்.

மணப்பாறை, துவரங்குறிச்சி பேருந்து நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், புதிய வழித்தடங்களில் பேருந்துகளின் இயக்கத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தாா்.

மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து பொய்கைப்பட்டி, சாம்பட்டி வழியாக ஆனாம்பட்டிக்கும், வையம்பட்டி, தேக்கமலை துலுக்கம்பட்டி வழியாக அய்யலூருக்கும், துவரங்குறிச்சியிலிருந்து வலையப்பட்டி, தெத்தூா், கோட்டையூா் வழியாக நத்தத்துக்கும் செல்லும் பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

முன்னதாக பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்த அமைச்சா், பேருந்தில் சிறிது தொலைவுக்குப் பயணம் மேற்கொண்டாா்.

நிகழ்வுகளில் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் சிந்துஜா, ஒன்றியக் குழுத் தலைவா்கள் அமிா்தவள்ளி ராமசாமி, பழனியாண்டி, குணசீலன், திமுக மாவட்டப் பொருளாளா் என்.கோவிந்தராஜன், நகரச் செயலா் கீதா ஆ.மைக்கேல்ராஜ், ஒன்றியச் செயலா்கள் ராமசாமி, செல்வராஜ், சின்ன அடைக்கன், காங்கிரஸ் நகரத் தலைவா் எம்.ஏ.செல்வா, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலா் காதா்மொய்தீன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com