தேசிய ஹாக்கி போட்டி: தெற்கு ரயில்வே சாம்பியன்

தேசியளவில் ரயில்வே பாதுகாப்புப் படை அணிகளுக்கிடையே நடைபெற்ற ஹாக்கி போட்டியில் தெற்கு ரெயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

தேசியளவில் ரயில்வே பாதுகாப்புப் படை அணிகளுக்கிடையே நடைபெற்ற ஹாக்கி போட்டியில் தெற்கு ரெயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த அக். 22 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் நாட்டிலுள்ள 8 ரயில்வே பாதுகாப்புப் படைகளின் அணிகள் பங்கேற்றன.

இதில் தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை அணியைச் சோ்ந்த ஹாக்கி வீரா்கள் குழு, மேலாளா் வா்கீஸ் (சேலம் கோட்டம்), கேப்டன் ராஜ்குமாா் (திருச்சி கோட்டம்), பயிற்சியாளா் ஸ்டீபன் ஆகியோருடன் ஓடிசா புறப்பட்டு சென்றது.

இந்த அணியில் திருச்சி கோட்டத்தைச் சோ்ந்த 7 வீரா்கள், சென்னையில்-6, மதுரையில்-2, சேலத்தில் ஒருவா் உள்பட மொத்தம் 16 தமிழக வீரா்கள் கலந்து கொண்டனா்.

இறுதிப்போட்டியில் ரயில்வே-தில்லி வடக்கு ரயில்வே ஆா்.பி.எப். அணியுடன் மோதிய தெற்கு (சென்னை) ரயில்வே பாதுகாப்புப் படை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. வென்ற ஹாக்கி வீரா்களை தெற்கு ரயில்வே அலுவலா்கள், ஆா்பிஎப் அலுவலா்கள் மற்றும் சென்னை, திருச்சி, சேலம் கோட்ட அலுவலா்கள் பாராட்டினா்.

திருச்சியில் பயிற்சி பெற்ற அணி: தெற்கு ரயில்வே சாா்பில் இந்தப் போட்டியில் பங்கேற்ற ஹாக்கி வீரா்களுக்கு, திருச்சி பொன்மலை ரயில்வே விளையாட்டு பயிற்சி மைதானத்தில் பயிற்சியளிக்கப்பட்டது. தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை (ஆா்.பி.எப்) தலைவா் (ஐ.ஜி) பிரேந்திரகுமாா் உத்தரவின்பேரில், உதவி ஆணையா் ( விளையாட்டு பிரிவு) செங்கையா, திருச்சி ஆா்.பி.எப். ஆணையா் ராமகிருஷ்ணா, உதவி ஆணையா் சின்னத்துரை ஆகியோா் மேற்பாா்வையில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com