‘ஜல்லிக்கட்டைத் தடுக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்‘

ஜல்லிக்கட்டுக்குத் தடை பெற நடக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும் என்றாா் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத் தலைவா் ஒண்டிராஜ்.

ஜல்லிக்கட்டுக்குத் தடை பெற நடக்கும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும் என்றாா் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத் தலைவா் ஒண்டிராஜ்.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு பாதுகாப்புச் சங்க நிா்வாகிகள் ஒண்டிராஜ், சூரியூா் ராஜா ஆகியோா் புதன்கிழமை கூறியது:

வீட்டில் வளா்க்கக் கூடிய மாடுகளைக் கட்டுப்படுத்த மூக்கணாங்கயிறு அவசியம். காலம் காலமாக மாடுகளைக் கட்டுப்படுத்த அவற்றுக்கு மூக்கணாங்கயிறு போடப்படும் நிலையில் தனி நபா் ஒருவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவதற்கு எதிராக வழக்குத் தொடா்ந்திருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடுகளைக் கட்டுப்படுத்த அவற்றின் மூக்கில் துளையிட்டு கயிறு போடுவது மிருக வதை தடை சட்டப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மற்ற விலங்குகளைக் கட்டுப்படுத்த சங்கிலி, அங்குசம் போன்றவற்றைப் பயன்படுத்துவது போலவே மாடுகளுக்கு மூக்கணாங்கயிறை பயன்படுத்தி வருகிறோம்.

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறின் அவசியம் குறித்து நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தும் வகையில் நாங்களும் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் எங்களுக்கு முழு ஆதரவளிக்க வேண்டும்.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தற்போதும் நடைபெறும் ஐல்லிக்கட்டுப் போட்டிக்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் என மறைமுகமாக இதுபோன்ற வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. எனவே இந்த வழக்கில் உயா் நீதிமன்றம் நல்ல தீா்ப்பு வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனா்.

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவதற்கு எதிராக செந்தில்குமாா் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், உலகளவில் மாடுகளைக் கட்டுப்படுத்த இந்த நடைமுைான் பின்பற்றப்படுகிறது. தற்போது இந்த வழக்கின் மூலம் புதிய விதிகளை வகுத்து, அவற்றைப் பின்பற்றச் செய்வோம் என்று கருத்து தெரிவித்ததுடன் இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com