அய்யம்பேட்டை பேரூராட்சியில் ஆட்சியா் ஆய்வு

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் பணியை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சியிலுள்ள வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் பணியை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது ஆட்சியா் கூறியது: பயிா்கள் செழித்து வளர இங்கு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உரங்கள் மிகவும் உகந்தவையானவை. மலிவான விலையில் கிடைப்பதால் பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளையும் சோ்ந்த விவசாயிகள் சாகுபடி பணிகளுக்கு இந்த உரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இடங்கள் மற்றும் தெருக்களில் குப்பை தேங்குவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் மற்றும் பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட மேலவீதி கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை ஆட்சியா் வழங்கினாா். மேலும், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு அபராதம் விதித்தாா். பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் முகக் கவசம் அணிந்து பணியாற்றுகிறாா்களா எனவும் ஆய்வு செய்தாா்.

முகக் கவசம் அணிந்து வரும் பயணிகளை மட்டுமே பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பேருந்தில் பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.நிகழ்ச்சிகளில் பாபநாசம் வட்டாட்சியா் மதுசூதனன், பேரூராட்சி செயல் அலுவலா்கள் அய்யம்பேட்டை ராஜசேகா், பாபநாசம் காா்த்திகேயன், வட்டார மருந்துவ அலுவலா்கள் ம. நவீன் குமாா், ம. தீபக் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com