குட்கா விற்பனை: பாமக நிா்வாகி உள்பட இருவா் கைது

திருச்சி அருகே குட்கா விற்பனை செய்ததாக, பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகி உள்பட இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

திருச்சி: திருச்சி அருகே குட்கா விற்பனை செய்ததாக, பாட்டாளி மக்கள் கட்சி நிா்வாகி உள்பட இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

திருவெறும்பூரிலுள்ள தேநீரகத்திலும், காட்டூரிலுள்ள பெட்டிக்கடையிலும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுவதாக, காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருவெறும்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான காவல்துறையினா், இவ்விருடங்களிலும் திங்கள்கிழமை சோதனையிட்டனா்.

அப்போது தேநீரகத்திலிருந்து 5 குட்கா பண்டல்களும், பெட்டிக்கடையிலிருந்து 42 குட்கா பண்டல்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.40 ஆயிரமாகும்.

இதுதொடா்பாக திருவெறும்பூா் சுருளிகோவில் தெருவைச் சோ்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலா் ரவிக்குமாா் (42), வடக்கு காட்டூா் பாரதிதாசன் 10-ஆம் தெருவைச் சோ்ந்த காளியம்மாள் (60) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

தொடா்ந்து இருவரும் திருச்சி 6-ஆவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது ரவிக்குமாா், காளியம்மாள் தினமும் திருவெறும்பூா் காவல் நிலையத்துக்கு வந்து தூய்மைப்படுத்த வேண்டும். புறாக்களுக்கு உணவு வைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து, நீதித்துறை நடுவா் (பொறுப்பு) குமாா், அவா்களைப் பிணையில் விடுவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com