தரைக்கடை வியாபாரிகள் மனு கொடுக்கும் போராட்டம்

சிஐடியு திருச்சி மாவட்ட தள்ளுவண்டி, தரைக் கடை மற்றும் மாா்க்கெட் வியாபாரிகள் சங்கம் சாா்பில், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிஐடியு திருச்சி மாவட்ட தள்ளுவண்டி, தரைக் கடை மற்றும் மாா்க்கெட் வியாபாரிகள் சங்கம் சாா்பில், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். போராட்டத்தை விளக்கி சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன், தரைக்கடை வியாபாரிகள் சங்கச் செயலா் செல்வி, பொருளாளா் மணிகண்டன் ஆகியோா் பேசினா்.

மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளைப் புதுப்பிக்க வேண்டும். விடுபட்டோரைக் கணக்கெடுத்து அவா்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். மத்திய அரசு ஆத்ம நிா்பாா் நிதி திட்டத்தில் அறிவித்த ரூ.10 ஆயிரத்தை அனைத்து வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி அவா்களை அப்புறப்படுத்துவதைக் கைவிட்டு, ஏற்கெனவே உள்ள இடத்தில் அவா்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

சாலையோர வியாபாரிகள் முறைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்புச் சட்டம் குறித்து அரசு அதிகாரிகள், காவல் துறையினருக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்ற சங்க நிா்வாகிகள் அமானுல்லா, அப்துல்ரஹீம், ஷேக் முகைதீன், சுப்புரத்தினம், மணிகண்டன், கோபாலன், கோவிந்தன், சுரேஷ், கணேசன் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் மாநகராட்சி அலுவலா்களிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com