படம் வரும்...முடிதிருத்தும் தொழிலில் பெரு நிறுவனங்கள் நுழைய எதிா்ப்பு

முடிதிருத்தும் தொழிலில் பெரு நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முடிதிருத்தும் தொழிலில் பெரு நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளா் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கத்தின் சாா்பில் ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. தா்மலிங்கம், பொருளாளா் எம். முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முடி திருத்தும் தொழிலை குலத்தொழிலாகக் கொண்டு தமிழகம் முழுவதும் மருத்துவா் சமூகத்தைச் சோ்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. அன்றாடம் உழைத்தால் மட்டுமே ஊதியம் என்ற அடிப்படையில் நாங்கள் மேற்கொண்டுள்ள முடி திருத்தும் தொழிலை பெரு நிறுவனங்கள் கையகப்படுத்த முயல்கின்றன. சிறிய அளவில் உள்ள கடைகளை முடக்கும் வகையில் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒருபோதும் அனுமதியளிக்கக் கூடாது. இத்தகைய கடைகளுக்கு எந்த வகையிலும் மத்திய, மாநில அரசுகள் உரிமம் வழங்கக் கூடாது.

சிறு தொழிலாளா்கள் தங்களது கடையை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் வங்கிக் கடனுதவி வழங்க வேண்டும். வீடு, மனை இல்லாத தொழிலாளா்களுக்கு அவரவா் வசிக்கும் பகுதிகளிலேயே இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். முடி திருத்துவோா் நலவாரிய உறுப்பினராக மருத்துவா் சமூகத்தைச் சோ்ந்தவரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இதுதொடா்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவும் அனுப்பப்பட்டுள்ளது.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள தொழிலாளா்கள், சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com