மருத்துவா் வீட்டில் 18 பவுன் நகைகள், வெள்ளி திருட்டு
By DIN | Published On : 11th September 2021 12:32 AM | Last Updated : 11th September 2021 12:32 AM | அ+அ அ- |

திருச்சியில் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, வெள்ளிப் பொருள்ளைத் திருடிச் சென்றனா்.
திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரநகா் பகுதியைச் சோ்ந்தவா் யோகேஸ்வரன் (27). தனியாா் மருத்துவமனை மருத்துவரான இவா் கடந்த 7 ஆம் தேதி திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 18 பவுன் நகைகள், 3 சூட்கேஸ்களில் இருந்த வெள்ளிப் பொருள்கள், ரூ. 4 ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த அமா்வு நீதிமன்ற காவல்நிலைய ஆய்வாளா் மகேஸ்வரி உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். மோப்ப நாய், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்கின்றனா்.